What's new

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • கார்த்திகை நாவல்ஸ் தளத்திற்கு வரவேற்கிறோம்.. இங்கு எழுத விரும்பும் எழுத்தாளர்கள் support@karthigaitamilnovels.com தொடர்பு கொள்ளவும்

அத்தியாயம் 30

kanimozhi

Member
Joined
Jun 22, 2023
Messages
30
சூர்யா.....
அவள் முந்தானை கொண்டு மூடிய முகத்திரையை பார்த்து இதழில் சிரிப்பை கொண்டவன் அதை எடுத்து பார்த்தவனுக்கு இதயம் நின்று விடுவது போல் இருந்தது....
அவனை மடியில் ஏந்தியவள் கழுத்தில் ஒருவன் கத்தி வைத்தபடி நின்றிருந்தான்.

சூர்யா ஒரு நிமிடம் நிலைமையை புரிந்து கொண்டான்.
ஏன்டா நானே லீவு விட்டாலும் நீங்க விட மாட்டீங்க போல. என்கிட்ட அடி வாங்கவே வந்துவிடுவீர்கள்...
எழுந்தவன் கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்து விட்டு
உங்களுக்கு என் கையில தான் காரியம் பண்ணனும்னு இருக்கு இதை யாராலும் தடுக்க முடியாது
இப்ப வாங்கடா...

ஏய்.... நாங்க 15 பேரு நீ ஒத்த ஆளு எங்களுக்கு நீ காரியம் பண்ணுவியா உன்னை நான் அடிச்சு ரத்த வெள்ளத்தில் மிதக்க விடல பாருடா.....
ஏய் போங்கடா.... அடியால் கூட்டத்தில் இருந்து ஓடி வந்தனர்...

வேட்டியை மடித்து கட்டி முதலாவது வந்தவன் நெஞ்சில் காலால் உதைக்க அவன் இரண்டடி தள்ளி விழுந்தான்.‌
கடப்பாரை கொண்டு வந்தவன் வயிற்றில் குத்தி அதை வாங்கி அவன் பின் தலையில் அடித்து கீழே தள்ளினான். கடப்பாரை மேலே தூக்கிப் பிடித்தவன் அடுத்து வருபவரை கூர் முனை கொண்டு தாக்கினான். ஒருவன் கையை உடைத்து அவன் கத்திக் கொண்டு வயிற்றை பதம் பார்த்தான். கையை பின்பக்கமாக வலைத்து நெஞ்சில் குத்தினான்.
கையை பிடித்து மூக்கில் பலமாக குத்தினான். அவனது மூக்கில் இருந்து சரமாரியாக இரத்தம் கொட்டி அவன் கையை பின் பக்கமாக வலைத்து மேலே தூக்கி தோலில் கிடத்தி இடுப்பை உடைத்தான். அதை கண்டவன் வாணி கழுத்தில் இருந்த கத்தியை எடுத்தான். இரண்டு அடி பின்னே சென்றவன் ஓட ஆரம்பித்தான்.
இருவரும் ஓட... அவன் எதிரில் வந்த ஒருவன் மீது இடித்து விட்டான்...

அண்ணா காப்பாத்து என்ன.... அவன் பின்னே ஓடி போய் மறைந்து கொள்ள....

காண்டாமிருகம் உன்ன தான் இன்னைக்கு அடிச்சு இங்க இருக்க பறவைக்கு விருந்து வைக்கலாம் இருக்கிறேன் வெளில வாடா.....

சூர்யா.....
பரிச்சயமான குரல் என்று சூர்யா நோக்க.... நீ.....

நான் தான் சேனாதிபதி. நண்பா என்ன மறந்துட்டியா....

டேய் சேனா நீயா அவனை கட்டி தழுவினான் சூர்யா....

நானேதான்..... இவங்க ஏன் துரத்துற எல்லாம் என் ஆளு...

என்னது..... உன் ஆளா அப்ப நீங்க என்னை கொள்ள தான் வந்து இருக்கியா....

டேய்.... இவனுங்க வந்தது எனக்கே தெரியாது. சின்ன வேலைன்னு சொன்னாங்க அதனால நீங்களே பாருங்கடா சொன்ன கடைசில உன்ன போட்டு தள்ள வந்தாங்கனு தெரியாது...... தெரிஞ்சா முன்னாடியே சொல்லி இருப்ப..

டே..... இந்த காண்டாமிருகத்தை நான் அடிக்காம விட மாட்டேன் தள்ளி நீ முதலில்....

சூர்யா வேணாண்டா எல்லாரையும் துவைத்து காய போட்டுட்ட. இவனை மட்டும் விடுடா எனக்கு ஹாஸ்பிடல் செலவு மிச்சம் ஆகும்.

சரி உனக்காக விடுற வா...

நான் இவங்கள கூட்டிட்டு ஹாஸ்பிடல் போற. அப்பறமா வீட்டுக்கு வந்து பார்க்கலாம்..

சரிடா..... பார்த்து அள்ளிட்டு போ . நடுவுல கொஞ்சம் ஆட்டினாலும் எலும்பு உடைந்துவிடும்.

பார்த்தாலே தெரியுது... நான் போற..


சூர்யா.... திரும்பி வந்தவன் அவளுக்கு அடி பட்டதா என்று பார்வையால் அவள் மேல் இருந்து கீழ் வரைக்கும் ஆராய்ந்தான்....
அவன் பார்வையில் நெலிந்தவள் என்ன என்பது போல் கேட்க....

என்ன பாக்கறீங்க.... அவள் குண்டு கண்ணை விழித்து கேட்க...

முண்ட கண்ணி.... கண்ணை உள்ளாற தள்ளு வந்து வெளிய விழுந்துட போகுது.....

போடா.... அரக்கன் . உன்ன விட நான் பரவாயில்லை. அவள் திரும்பி நடக்க...

என்னது போடாவா... அவள் கூந்தலை பின்னாடி இழுத்து அவன் நெஞ்சில் பெண்ணவளை தாங்கினான்...
பெண்மைக்கே உரிய மாய வாசனை அவனை இழுத்தது. அவனையும் அறியாமல் அவள் வதனத்தில் மயங்கினான்..
டே...... சூர்யா மயங்காத....
முண்ட கண்ணி மாயக்காரி உன்னையே முழுங்கிடுவா.....

தேவ் என்னை விடுங்க... அவன் கையை எடுக்க முயற்சிக்க....

அமைதியா இருடி.....
நானே விட்டுருவேன். நீ இப்படியே பண்ணினா கை தலையிலிருந்து கீழே வந்திருக்கும் பரவாயில்லையா...

அவள் அமைதியாய் நின்றாள்.

நான் கேக்கற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு உன்னை விடுற...

கேளுங்க சொல்ற... அவள் சிறு புன்னகையோடு முகத்தை வைத்து கொண்டால்....

என்னை பிடிச்சு தான் கல்யாணம் செய்தியா இல்லை கட்டாயத்தில் செய்தியா....

கண்டிப்பா தெரியனுமா....

இப்பவே தெரியனும்.... சொல்லுடி

என் வாயில் பதில் வரனும் நினைச்சா காத்துட்டு இருங்க‌. சீக்கிரம் கிடைக்கும்..
இப்ப வாங்க வீட்டுக்கு போலாம்..
அவன் கையில் இருந்து விடுபட்டவல் தன்னவன் கை கோர்த்து இருவிழிகள் கலந்து நிலாவை மையமாக கொண்டு தன்னவன் அன்பினை விழிகளில் காட்டினாள்...


காலை பொழுது மெல்லிய சூரிய கதிர்கள் கொண்டு ஜன்னல் வழியே பாரதி முகத்தில் பட
அதை கண்டுகொள்ளாமல் போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு மறுபடியும் தூக்கத்திற்கு சென்றாள்..
ராணி காலையில் எழுந்தவள் வீட்டு தெய்வத்தை பூஜித்து விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
ஒரு கப் காபியோடு அறைக்கு சென்றாள்...

ஏண்டி ..... தூங்கு மூஞ்சி விடிஞ்சு எவ்வளவு நேரம் ஆகுது எழுந்திருடி....

ஏய் கொஞ்ச நேரம் டி....
என் பாய் ஃப்ரெண்ட் கூட இப்பதான் டூயட் பாடவே ஆரம்பிச்சிருக்கேன்....
ஏண்டி இப்படி பண்ற.... சினிங்கியவாரு போர்வையை தூக்கி போர்த்தி கொண்டாள்....

அடி.... கழுதை.
இல்லாத.... ஒரு பாய் பிரண்டுக்கு டூயட் ஒரு கேடு எழுந்துருடி....

நான் உனக்கு சாபம் விடுறேன்.
நீ ரொமான்ஸ் பண்ணும் போதெல்லாம் யாரோ ஒருத்தர் வந்து தடுப்பாங்கடி....
இந்த கண்ணியோட சாபம் உன்ன சும்மாவே விடாது.....

எம்மா... கண்ணகி.
நீ முதலில் எழுந்து காபி குடி எனக்கே சாபம் கொடுக்கிறா....
ராணி டேபிளில் அமர்ந்து காபி குடித்தாள். பாரதி பேட்டில் அமர்ந்தபடி குடித்தால்...

ஏண்டி.... இன்னைக்கு வேலைக்கு போறியாடி.....

இப்ப தான எழுந்த அதுக்குள்ள ஞாபகப்படுத்தற....

நான் எதுவும் சொல்லவில்லை. நான் டிபன் ரெடி பண்ற...

அவள் சமையல் அறைக்கு சென்று சமையல் செய்ய...
பாரதி சமையல் மேடையில் அமர்ந்து அவளுடன் பேசி கொண்டிருக்க....
வீட்டு காலிங் பெல் அடித்து...

பாரதி.... போய்ட்டு கதவை திரடி...

போறேன்...
இந்த நேரத்தில் யாரு... அவள் கேரட்டை கடித்த வாரு கதவை திறக்க...
வாசலை பார்த்த வாரு அதிர்ச்சியில் நின்று விட்டாள்....
 

Author: kanimozhi
Article Title: அத்தியாயம் 30
Source URL: Karthigai Tamil Novels-https://karthigaitamilnovels.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top