What's new

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • கார்த்திகை நாவல்ஸ் தளத்திற்கு வரவேற்கிறோம்.. இங்கு எழுத விரும்பும் எழுத்தாளர்கள் support@karthigaitamilnovels.com தொடர்பு கொள்ளவும்

இளம்பரிதியின் இளமலரே- 2

kalaisree

New member
Joined
Jun 20, 2023
Messages
4
அதிகாலை ஐந்து முப்பதுக்கு எப்பொழுதும் போல் காலை மற்றும் மதிய உணவை செய்து கொண்டிருந்தவளின் கவனத்தை தயங்கியபடி நின்ற தேவன் கலைக்க சமையல் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு தேவன் புறம் திரும்பினாள்.
சரியாக இந்த நேரத்துக்கு கிளம்பினால் தான் 6:00 மணிக்கு அவன் பேப்பர் போடும் ஆர் ஆர் நகருக்கு செல்ல முடியும்.அப்படி இருக்க தயாராகியும் இன்னும் கிளம்பாமல் இருக்கும் தம்பியை கேள்வியாக பார்க்க அவள் முகத்தை தயங்கிய படியே பார்த்தபடி நின்று இருந்தவன்.
அதற்கு மேல் முடியாமல் "அக்கா இந்த செமஸ்டருக்கு ஐ வி கூட்டிட்டு போறாங்க.இதுக்கு கண்டிப்பா போகணும். என்னால் அவாய்ட் பண்ண முடியலை அக்கா. வராதவங்களுக்கு டிபார்ட்மெண்டில் பைன் என்று சொல்லி இருக்காங்க" என ஏதோ கொலை குற்றம் செய்தவனைப் போல் தயங்கியபடி பேசும் தம்பியை கண்டு உள்ளம் நடுங்கியது. அதை நொடியில் சமாளித்தவள்."டேய் காலேஜ் என்றால் கூட்டிட்டு தானே போவாங்க. இதுக்கு ஏன்டா தயங்குற" என நடுங்கும் குரலை சமன்படுத்தி இயல்பாக கேட்டாள்.
இல்லை அமௌன்ட் 5000 கேக்குறாங்க எனக் கூறியதும் தான் அவன் தயக்கத்திற்கான காரணம் புரிந்தது. தொகையை கேட்டதும் அவளுக்கும் மனம் பிசையந்தது.
ஆனால் தம்பி இப்படியே இருப்பது சரியில்ல என புரிய தன் தயக்கத்தை சிறிதும் வெளியே காட்டாமல் "அதில் என்ன டா சும்மாவா காலேஜில் கூட்டிட்டு போவாங்க அதுவும் நீ எவ்வளவு பெரிய காலேஜில் படிக்கிற. பணம் எப்ப கட்டணும்னு சொல்லு கட்டிடலாம் " என நம்பிக்கையுடன் கூறினாள்.
" இல்ல அக்கா உங்க கிட்ட பணம் இருக்கா" ஏனெனில் மாதக் கடைசியில் தன் அக்காவின் கையில் ₹20 கூட முழுதாக இருக்காதே என்ற தயக்கத்தில் கேட்டான்.
அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. ரவீந்திரன் சார் கிட்ட கேட்டால் கொடுப்பார். அடுத்த மாசம் வந்தால் சம்பள பணத்தில் புடிச்சுக்க சொல்லிக்கலாம். எப்பயும் சேவிங்காக பணம் எடுத்து வைப்பேன்.
போன மாசம் அப்பாக்கு மெடிசின் செலவு கொஞ்சம் அதிகம் அதிகமாயிடுச்சு. மத்தபடி சம்பளம் வந்துருச்சுன்னா எப்படியும் சரி பண்ணிடுவேன் "என புன்னகைத்தபடி கூறிய பிறகு தான் அவனின் முகம் சீரானது.
தேங்க்ஸ் அக்கா எனக் புன்னகைத்தபடி ஓடியவனின் துள்ளளில் தெரிந்தது.அந்த ஐ வி க்கு போக அவன் எவ்வளவு ஆர்வமாக உள்ளான் என்பதை. கடந்த ஐந்து வருடங்களில் இரண்டு முறை சொந்த ஊருக்கு நிலங்களை விற்க போனது தான் மற்றபடி வேறு எங்குமே அவளோ அவள் தம்பியும் செல்லவில்லை.

அதனால்தான் தம்பியை அனுப்புவதில் உறுதியுடன் உள்ளாள். ஐ வி கண்டிப்பாக அவன் படிப்பு சார்ந்தது தான் கூட்டி செல்வார்கள்.அதனால் தான் இவ்வளவு ஆர்வமாக உள்ளான்.
அவளின் நகைகளை விற்று இந்த படிப்பில் சேர்த்தது மிஷின்களின் மீது தேவன் கொண்டுள்ள காதலை கண்டு தான்.கண்டிப்பாக இந்த ஆர்வத்தை குறைக்க கூடாது ஏதாவது ஏற்பாடு செய்தாக வேண்டும் என மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டால்.
அவனிடம் கூறி விட்டாளே தவிர எப்படியும் பணம் கிடைப்பது சிறிது சிரமம் தான் இருந்தாலும் தம்பிக்காக யாரிடமாவது கைமாத்தாவாது வாங்க வேண்டும் என உறுதியுடன் வேலைகளை முடித்து ஆபீஸிக்கு சென்றாள்.
எப்பொழுதும் போல் ஒன்பது ஐந்துக்கு ஆபீஸிக்கு வந்தவள். தனது வேலைகளை கவனிக்க ஆரம்பிக்க இன்று ஆச்சரியப்படும் வகையாக ஒன்பதே காலுக்கு அனைவரும் அவரவர் இடத்தில் வேலைகளை பொறுப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
எப்பொழுதும் 9:30க்கு தான் ஆடி அசைந்து வந்து அதன் பிறகு தான் பொறுமையாக வேலைகளை கவனிப்பார்கள்.அப்படி இருக்க இன்றைய சுறுசுறுப்பிற்கு ஆன காரணம் புரியாமல் யாரிடமும் கேட்கவும் தோன்றாமல் அமைதியாக தன்னுடைய வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.
எப்பொழுதும் 11 மணிக்கு முடியும் ரிப்போட்டிங் அனைவரும் சரியாக வேலை செய்து முடித்ததால் பத்து காலுக்கே முடிந்து இருந்தது.அவளும் சரியாக பத்து முப்பதுக்கு வேலைகளை முடித்து வைத்து விட்டாள். எப்படியும் இந்த நேரத்தில் எம்டி இடம் பேசி விட வேண்டும் என ரிப்போட்டிங் அனைத்தையும் எடுத்துக் கொண்டு ரவீந்திரன் அறைக்கு சென்றாள்.
அங்கு வேறு ஒருவர் இருக்கவும் தயக்கத்துடன் நின்றவளை அங்கேயே காத்திருக்கும் படி சைகை செய்தவர்.அவருடன் பேச ஆரம்பித்தார். அவர்கள் பேச்சு அனைத்தும் கம்பெனியின் முன்னேற்றம் பற்றி இருக்க அவள் மனதிற்கும் சிறிது நிம்மதியாக இருந்தது.
கண்டிப்பாக கம்பெனிக்கு புதிதான ஆடர்கள் வந்தால் இரண்டு வருடங்களாக இன்கிரிமெண்ட் தராதவர்கள் கண்டிப்பாக தருவார்கள். என மனதில் பல கோட்டைகளை கட்டிக் கொண்டிருந்த அவளின் எண்ணத்தை சுக்கு நூறாக்கும் படி தங்களின் புது எம்டி அனைத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியதும் மனம் பதற கண்களோ சிறிது கலங்கி விட்டது தன் பலவீனம் உணர்ந்து கையில் இருந்த பைலை இருக்க பிடித்தபடி தவிப்பாக ரவீந்திரனை பார்க்க அவரோ வந்த புதிய ஆளை அனுப்பி வைத்து கொண்டிருந்தார்.
அவர் போன பிறகு தவிப்புடன் பார்க்கும் மலரை கண்டு மென்மையாக புன்னகைத்தவர்.கவலைப்படாத மா உன் வேலைக்கு ஒரு பிரச்சனை இல்லை இன்கிரிமென்ட் தரவும் சொல்லியிருக்கேன் " எனக்கூறியதும் தான் மனம் அமைதி பெற்றது. ஆனால் வேறு யாருக்கோ கம்பெனியை விற்கிறேன் என கூறியது மனதை உருத்த அதை அவரிடம் கேட்க புன்னகைத்தவர்.
உனக்கே தெரியும் இந்த கம்பெனி எங்க சித்தப்பா வீட்டில் இருந்து எனக்கு வந்தது. சித்தப்பாக்கு வாரிசு இல்லாததால் இந்த கம்பெனி பொறுப்பை நான் பாத்துக்கணும்னு ஒரு கட்டாயம் வந்தது. எனக்கு இந்த துறையில் ஆர்வம் இல்லைனாலும் சித்தப்பாக்காக இவ்வளவு வருஷம் பார்த்துக்கிட்டேன்.
ஆனால் இனிமேலும் முடியலை மா. எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பொண்ணு அவளுக்கும் இப்ப குழந்தை பிறந்து இருக்கு. அம்மா இல்லாத பொண்ணு அம்மாவா நான் தானே பார்த்துக்கணும்.என்னோட பால்ய சிநேகிதனும் அங்க தான் இருக்கான் சின்னதா ஒரு வேலை பொண்ணு கூடையும் பேத்தி கூடையும் நிம்மதியான லைஃப். ரிட்டயர்மென்ட் லைஃப்பை அனுபவிக்க ஆசை வந்துடுச்சு மா.
அதுக்காக அனாமத்தமா எல்லாம் கம்பெனியை தூக்கி கொடுக்கலை.என்னோட முப்பது வருஷம் உழைப்பும் இதில் இருக்கு. எனக்கு கம்பெனியில் லாபம் பெரிசு இல்ல ஏன்னால் எனக்கு தேவைக்கு அதிகமாகவே பணம் இருக்கு.
அதனால ஒர்க்கர்ஸ்க்கு பேவரா பண்ற கம்பெனிக்கு தான் நம்ம கம்பெனியை கொடுக்கப் போறேன். அதனால் பயப்படாமல் கவலைப்படாமல் இருக்கலாம்" என நம்பிக்கையுடன் கூற அதில் நம்பிக்கை துளிர்த்தாலும் ரவீந்திரனிடம் உணரும் பாதுகாப்பு தன்மையை இனிமேல் உணர முடியுமா என்பது கேள்வி குறியே.
அவரும் ரிப்போர்ட்டிங் பத்தி பேச ஆரம்பிக்க தனது சஞ்சலங்களை ஒதுக்கி வைத்து விட்டு அவர் கூறும் கரெக்ஷன்கள் அனைத்தையும் சரி பார்த்தாள். அப்பொழுதுதான் அவர் டேபிளில் இருந்த பச்சை நிற பைல் அவள் கவனத்தை ஈர்த்தது.
பச்சை நிற பைலின் நடுவே இளா குரூப் ஆஃப் கம்பெனி என்ற எழுத்துக்கள் தங்க நிற சூரியகாந்தியின் மேல் இருப்பது போல் இருந்தது. அது அனைத்தும் வேறு எதோ நினைவுகளை தூண்டிவிட ரவீந்திரனின் தொடர் அழைப்பில் தான் நினைவு பெற்றாள்.
அவள் ஏதோ குழம்பி போய் உள்ளாள் என்பது புரிந்தாலும் எப்படியும் கேட்டாலும் கூற மாட்டாள் என்று மூன்று வருடமாக அவளைப் பார்க்கும் அவருக்கு தெரிந்ததால் வேற ஏதாவது வேணுமா என கேட்டதும் தான் தம்பியை ஐ வி செல்ல பணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டியது நினைவு வந்தது.
உடனே தயக்கத்துடன் கேட்க "இதுக்கேம்மா இவ்வளவு தயங்குற நான் என்ன உனக்கு சும்மாவா தரப் போறேன்.அடுத்த மாசம் சம்பளத்தில் பிடிச்சுக்க போறேன் அதுக்கு ஏன் இவ்ளோ தயக்கம்.நீ சென்னையில் இருக்க உன் காசு வாங்கறதுக்கு நீ இவ்வளவு தயக்கப்பட்டால் எப்படி"என தன்னுடைய பிஏ ரீனாவிடம் 5000 ரூபாய்க்காண ரசீதை கொடுத்துவிட்டவர்.
"அக்கவுண்ட் செக்சன் பத்மா கிட்ட போய் வாங்கிக்கோமா. அப்புறம் நான் கம்பெனிக்கு அனுப்பிய லிஸ்டில் உன் பேரு இருக்கு. அதனால் பயப்படாதே இன்கிரிமென்ட் எப்படியும் பிடித்தம் போக ஒரு 3000 வரும். முடிஞ்சால் பர்மனென்ட் ஸ்டாப்பா போட்டு விட சொல்றேன்". எனக்கு ஒரு அதுவும் கண்கள் நீர் தடவ அவளை நன்றி உடன் பார்த்தாள்.
"இது நீ உழைக்கிறதுக்கான பலன் தான் மா" எனக் கூறி அவளை அனுப்பி வைத்தார். மலர்விழிக்கு தற்போது தான் மனம் நிம்மதி அடைந்தது. இனி சிறிது சேமிப்பு எடுத்து தம்பிக்கு புது துணிகள் வாங்கலாம்.
கல்லூரியின் இறுதி வருடத்தில் எப்படியும் ப்ராஜெக்ட் என செலவுகள் அதிகமாகும். அதற்கும் சேர்க்க வேண்டும் என மன கணக்குகளை போட்டவள். தனது வேலைகளையும் கண்ணும் கருத்துமாக முடித்தாள்.
***************
அந்த மீட்டிங் அறையில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் வரும் அளவு அவ்வளவு அமைதியாக இருந்தது. அந்த அமைதியை கிழித்துக்கொண்டு இளா குரூப் ஆப் கம்பெனியின் எம் டியின் கர்ஜனை அங்கிருந்த 24 போர்ட் மெம்பர்ஸையும் நடுங்க செய்தது.
அதிலும் 55 வயது இருக்கும் அந்த கம்பெனியின் ஒன் ஆப் த பார்ட்னர்'ஸ் ஆக இருக்கும் இருவருக்கு தங்களின் வயதில் பாதியாக இருக்கும் அவனிடம் பேச்சு வாங்குவதில் பெரும் அவமானம் பிடுங்கி தின்றது. அதை உணர்ந்தது போல் மிஸ்டர் ரவீந்திரன், சகாதேவன் உங்களுக்கு விருப்பம் இல்லைனா ஜஸ்ட் கெட் அவுட் ஆப் கம்பெனி"என்ற அவனின் நக்கலான குரலில் இருவருக்கும் அவமானம் பிடுங்கி தின்னாலும் அதை முகத்தில் காட்டாமல் உணர்ச்சி துடைத்த முகத்துடன் அமர்ந்திருந்தார்கள்.
இளமையில் போட்ட ஆட்டம் இப்பொழுது அவர்களை நன்றாக அடித்து விட்டது.தந்தை உருவாக்கிய தொழில் இவ்வளவு காலம் இருவரையும் காத்திருக்க இப்போதோ அதை கவனித்துக் கொள்ள முடியாமல் அவர்களின் மகன்களும் அவர்கள் பெற்றவர்கள் போல் உல்லாச பேர் வழியாக இருக்க வேறு வழியின்றி இளா குரூப் ஆஃப் கம்பெனிக்கு தங்கள் சேர் 50% எழுதி வைத்துவிட்டு அவன் அனைத்து வேலைகளும் செய்ய இவர்களுக்கு முதலீடாக போட்ட பணத்திலிருந்து லாபம் வந்து கொண்டிருந்தது.
அதுவே இவர்களுக்கு தாராளம்தான். இருந்தாலும் மனிதனின் அல்ப ஆசை விடுமா வந்த லாபத்தை பொய் கணக்கு காட்டி முக்காவாசி பணத்தை இவர்கள் சுருட்டி இருக்க விடா கண்ணன் விடுவானோ அவர்களை விட அவர்கள் கம்பெனியின் புள்ளி விவரங்களை சரியாக வைத்திருப்பவர்களுக்கு இவர்களின் கையாடல் அடுத்த நிமிடமே செய்தியாக வந்துவிட்டது.இல்லை எனில் இந்த ஐந்து வருடங்களில் தமிழ்நாடு முழுவதும் எப்படி தன் தொழில் சாம்ராஜ்யத்தை அவன் ஊன்றி இருப்பான்.
எல்லாம் முதுகில் குத்தும் துரோகிகளும் ஏமாற்றும் எதிரிகளையும் அழித்து அவர்கள் மீது தான் அவனின் தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளான். வாழ்வென்றால் என்ன என்று தெரியாமல் இருந்த பொழுதில் பட்ட துரோகத்தின் அடி அவனை எக்கிரும்பாக உருமாற்றி இருக்க வரும் எதிரிகள் அனைவரும் அவனிடம் அடிபட்டு தான் போக வேண்டும்.
இருவரின் சேரையும் ரத்து செய்து அவர்கள் சுருட்டிய பணத்தையும் முழுவதும் எடுத்து நஷ்ட ஈடாக அவர்களிடம் இருந்து 25 லட்சம் பெற்றான். அடுத்து 24 மணி நேரத்தில் அவர்களின் கம்பெனி இருந்த இடம் தெரியாமல் மாறியது. இருவர் கண்களிலும் வஞ்சத்துடன் தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவனை உரு தெரியாமல் அழிக்க வேண்டும் என மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டார்கள்.

ஹலோ நட்புக்களே....
கதை எப்படி போகுது கதையை பத்தி உங்களுக்கு தோன்றுதான் கமெண்ட் பண்ணுங்க அதை பிடித்து இருந்தால் என்னை பாலோ பண்ணி சப்போர்ட் பண்ணுங்க ரொம்ப பிடிச்சிருந்தால் ஸ்டிக்கர் கொடுத்து ஊக்குவிங்க.
 

Author: kalaisree
Article Title: இளம்பரிதியின் இளமலரே- 2
Source URL: Karthigai Tamil Novels-https://karthigaitamilnovels.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top