What's new

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • கார்த்திகை நாவல்ஸ் தளத்திற்கு வரவேற்கிறோம்.. இங்கு எழுத விரும்பும் எழுத்தாளர்கள் support@karthigaitamilnovels.com தொடர்பு கொள்ளவும்

ஜாமம் 2

Roque Jessica

New member
Joined
Jun 22, 2023
Messages
3
உயர்ந்த தெருவிளக்கின் கீழ் தாரா வந்து நிற்க அவள் நிழல் கூடவே ஒரு கர்பிணியின் நிழலும் தெரிந்தது. யாரும் இதனை கவனிக்கவில்லை. எல்லோரும் பேசி சிரித்து விளையாடி கொண்டே தெருமுனைக்கு சென்றனர்.

தாராவின் கையினை பிரிட்டோ பற்றிய போது அவள் கை அனலாய் சுடேறித்தது.

“ஹே..... பேபி ஏன் மா உன் கை இவ்ளோ சூடா இருக்கு?” என்று திடுக்கிட்டு கேட்டான் பிரிட்டோ.

“என்னது என் கையா?” என்று ஆச்சரியமாக வினாவினாள் தாரா.

“பின்ன உன் பக்கத்துவீட்டு ஆயா கையா?” என சங்க காலத்து மொக்கை போட்டான் ஷங்கர். அவன் போட்ட மொக்கையினை யாருமே கண்டுகொள்ளவில்லை.

“பட் ஐ அம் நார்மல்.” என்று பிரிட்டோவின் கேள்விக்கு பதிலளித்தாள் தாரா.

“எஸ் யூ சீம்ஸ் டு பி நார்மல்........ பட்.....” என்ற பிரிட்டோவிடம்,

விவேக் “அவ கை சூட்டுல ஒரு ஹல்ப் பாயில் சைடுடிஷ் க்கு போட்டு தரியா? எவன் டா இவன்...... சும்மா மூடிட்டு கம்ம்னு வாடா....” என்று சலித்து கொண்டான் விவேக்.

விவேக் எதிர்பார்த்தபடியே அமானுஷ்ய செயல்கள் அரங்கேற ஆரம்பித்து இருந்தது. அவனுக்கு தெரிந்திருந்தது, தாரா அமானுஷ்யமான ஆவியிடம் மாட்டிக்கொள்ள போகிறாள் என்று.

‘விட கூடாது, விடவே கூடாது....... தாராவ எந்த ஒரு அந்நிய சக்தியும் நெருங்க கூடாது.......’ என நினைத்தானே தவிர அதற்காக என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளுக்குள் தவித்தான்.

அப்பொழுது காப்பி கடையை அனைவரும் வந்து சேர்ந்திருந்தனர். சிலர் டீயும், சிலர் காப்பியும் என டீ கடைகாரரிடம் கூறினார். நதிகா, வேதிக்கா, நல்லி தவிர எல்லாருக்கும் புகைபிடிக்கும்பழக்கம் இருந்தது. அது பெரிய சிட்டியானதால் பெண்கள் புகைத்து தள்ளுவதை பெரிதாக யாரும் கண்டுகொள்வது இல்லை.

[புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்

இப்டிலாம் போட ஆசைதான், ஆனா நம்ம மக்களுக்கு நம்ம நல்லது சொன்ன பிடிக்காதே....

mindvoice--- நம்மலாம் நல்லவங்க மாறி பேசுனா சிரிச்சிருவாங்க பா...]

“ஏன் டா ஏதோ காபே னு சொல்லி கூட்டிட்டு வந்த...” என்ற வேதிகாவிடம், “ஏன் இங்கலாம் டீ காப்பி குடிக்க மாடீங்களோ?” என்று எகத்தாளமாய் கேட்டான் ஷங்கர்.

“அப்பிடிலாம் இல்லியே. காபேனா குடிச்சிருக்க மாட்டேன். காஸ்ட்லியா இருக்கும்ல.....” என்று இப்படி பேசிகொண்டிருக்க...... அங்கே திரண்ட தெருநாய்கள் இவர்கள் கூட்டத்தை பார்த்தவாறே ஊளையிட ஆரம்பித்தது.

அதே நேரத்தில் டிசம்பர் மாத குளிரை மறைத்த விதமாய் சம்பந்தமே இல்லாமல் ஒருவிதமான வெப்பத்தை உணர்ந்தனர் நண்பர்கள்.....

“இது என்ன திடீர்னு இவ்ளோ சூடா இருக்கு இந்த இடம்?” என்ற நதிகாவின் தலையில் குறும்பாக ஒரு குட்டு வைத்த விவேக்,

“டீ கட அடுப்புகிட்ட நின்னுகிட்டு சூடா இருக்கு புழுக்கமா இருக்கு னு சொல்ல வேண்டியது. நைட் தூங்குறப்ப பேன் ஆஹ் போட்டா ஆத்தாடி அம்மாடி குளிருதுனு கதற வேண்டியது.” என்று விவேக் நதிகாவை கடிந்துகொண்டான்.

[பேய் இருக்குனு யாரும் கண்டுபிடிச்சிற கூடாதுன்னு எப்பிடிலாம் சமாளிகறான் பா நம்ம சுந்தர்.சி]

“சீக்கரம் இங்க இருந்து கெளம்பலாம் பா.....” என்று அவசரபடுத்தினாள் ரியா.

அதுவே நல்லது என்று அனைவருக்கும் தோன்றியது போன்று எல்லோரும் வீட்டை நோக்கி நடையை கட்டினர்.

தாரா சற்று பயந்து இருந்தபடியால் பிரிட்டோ அவள் மனநிலையை மாற்ற அவளை கலாய்த்து கொண்டே வந்தான். அவளும் அவள் அச்ச மனநிலையில் இருந்து கொஞ்சம் விடுபட்டு ஜாலி மூட்க்கு மாறினாள்.

அனைவரும் முன்னே செல்ல தாராவும் பிரிட்டோவும் பின்னே காதல் மொழி மொழிந்த படி பின்னே வந்து கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு பின்னால் விவேக் வேதிகா இருவரும் அமைதியாக நடந்து வந்து கொண்டிருந்தனர். விவேக்கின் உடல் மட்டுமே நடந்து கொண்டிருந்தது ஆனால் மனமோ அமானுஷ்யமாக நடந்த நிகழ்வுகளை பற்றியே சிந்தித்து கொண்டே இருந்தது.

திடீர் என பலத்தகாற்றோடு ஒரு உருவம் விவேக் வேதிகாவை கடந்து செல்ல... வேதிகா திடீர் என்று நின்றுவிட்டாள். நாய்களின் ஊளை ஆரவாரம், பலத்த காற்று, வானை வெட்டும் மின்னல் என அந்த இடமே மிகவும் அமானுஷ்யமாய் மாற. இந்நேரத்தில் எல்லாரும் ஓடவே எத்தனித்து ஓட முயல யாராலும் அவ்விடத்தை விட்டு நகர முடியவில்லை. எல்லாம் மாயமாக இருந்தது. விவேக் வேதிகாவை பார்க்க, அவளோ சிவந்த கண்களுடன், நீண்ட கருமையான அவள் தலை மயிர் பலத்த காற்றில் தாண்டவ நடனமாட, ஆக்ரோஷமாய் மூச்சிவாங்கிய படி மிகவும் வித்யாசமாக காட்சியளித்தாள். வேதிகா முழு சக்தியுடன் கத்தினாள், “எல்லோரும் ஓடுங்க......”

யாராலும் ஒரு அடி கூட நகர முடியவில்லை............ விவேக் பலமான குரலில் ஜெபிக்க ஆரம்பித்தான், “எல்லாவல்ல கர்த்தரின் மாட்சியால் எங்கள் அனைவரையும் இந்த இக்கட்டானா சூழலில் இருந்து காப்பாற்றும் ஐயா......” என்று இறைவனை நோக்கி வேண்டவும் அனைவரின் கால்களும் விடுதலையாகி ஓடியது.... அடுக்குமாடி குடியிருப்பு வந்ததும். தாராவின் வயிற்றை யாரோ பிடித்து நசுக்குவது போல அவள் உணர, வயிற்றை பிடித்து கதறியவாறே முற்றத்திலே மயங்கிவிட்டாள். வேறு எல்லோரும் வீட்டினுள் அடங்கிவிட்டனர். தாராவுடன் வந்த பிரிட்டோவும் விவேக்கும் தாராவை அள்ளி கொண்டு படியில் ஏறி தங்களின் பிளாட்டில் நுழையவே.. காற்றும் ஊழையும் அடங்கி இருந்தது....

“வேதிகா எங்க?”பிரிட்டோ வினாவ..

விவேக் ஓடி பால்கனியில் நின்று பார்த்தான்....

மரகிளைகள் மறைத்தது... கொஞ்சம் எட்டி பார்த்தான், வேதிகாவை சுற்றி நாய்கள் ஊளையிட, மிக பலமான காற்றும் வீச, மின்னல் வானை பிளந்து புமியை தாக்க அவள் ஒரு கோரமான கருமையான உருவத்துடன் சண்டையிட்டு கொண்டிருந்தாள்.

---ஓலமிடும்---​
 

Author: Roque Jessica
Article Title: ஜாமம் 2
Source URL: Karthigai Tamil Novels-https://karthigaitamilnovels.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top